மஹிந்த ராஜபக்ஷ இன்னும் ஸ்ரீ.சு.கட்சியில்..

முன்னாள் ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இன்னும் விலகவில்லை என்று, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று(19) காலை கொழும்பில் இடம்பற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

அதன்படி, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்னும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எனவும் அவர்களது சம்பளத்தில் இருந்து 3000 ரூபா இன்னும் கட்சி நிதிக்காக அறவிடப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் சுதந்திரக் கட்சியின் தொண்டனாக கடமையாற்றுவார் எனவும் அதன்படியே அவருக்கு எதிர்கட்சிப் பதவி வழங்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.