நேற்று இடம் பெற்ற வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பின் வாக்களிப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமூகம் அளிக்காமை பலரால் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
எனினும் அவர் நேற்று இரண்டு திருமண நிகழ்வில் கையொப்பமிட இருந்தமையால் அவரால் நாடாளுமன்றத்திற்கு சமூகம் அளிக்க முடியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் ரோஹான வெலிவிட்ட எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்