மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையமும் மேயும் மாடுகளும்

மத்தளை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கை நாளாந்தம் ஒரு விமான சேவை என்ற ரீதியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த விமானம் கட்டுநாயக்கவில் இருந்து மத்தளைக்குச் சென்று அங்கிருந்து அபுதாபி நோக்கிப் பயணிக்கவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் அன்றியா தினம் கூறினர்.

நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக மத்தளை மஹிந்த ராஜபக்ஷ  விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.

ஆனால், தற்போது விமான நிலைய நுழைவாயிலில் கால்நடைகளை அவதானிக்க முடிந்தது.

வீதியின் இருமருங்கிலும் இருந்த பாதுகாப்பு வேலிகளின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளமையால், கால்நடைகள் உட்பிரவேசிப்பதற்கு பல நுழைவாயில்கள் உருவாகியுள்ளன.

வீதியின் மின்குமிழ் கட்டமைப்பு செயற்படாமையினால், காட்டு யானைகள் இரவில் சஞ்சரிப்பதற்கு ஏதுவான சூழ்நிலைக்கு வித்திட்டுள்ளது ராஜபக்ஷ விமான நிலையம்..

அதிக நிதியை செலவிட்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த நுழைவாயில் கட்டமைப்பில் தற்போது மிளகு காயவைக்கப்பட்டுள்ளமையையும்  காணக்கூடியதாக இருக்கின்றதென்றால் பாருங்களேன்.