ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவருக்கு சம்பளமாக பெருந்தொகை பணம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்தவின் ஆட்சியில் 15 இலட்சம் சம்பளம் வழங்கப்பட்ட போதிலும் தற்போதைய நல்லாட்சியில் 35 இலட்சம் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புனரமைப்பு காரணமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை 200 விமானங்களின் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளமையானது அரசியல் சூழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் குறித்த விமானங்களை மத்தள விமான நிலையத்துக்கு அனுப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் மத்தள விமான நிலையத்தை மோசமான விமான நிலையமாக இனங்காட்டுவதற்கு எடுக்கப்படும் சூழ்ச்சிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.