மஹேந்திரனை அழைத்து வந்தால் NYT குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பேன்…

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பிலான முதலாவது சந்தேக நபரான அர்ஜுன் மகேந்திரனை பாராளுமன்றிற்கு அழைத்து வந்தால் தான் நிவுயோக் டைம்ஸ் பத்திரிகை (NYT) தொடர்பில் பதிலளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெபிலியான சுனேந்ரா தேவி பிரிவெனாவின் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

“மிகவும் வெற்றிகரமானது (ஆட்சி) பொது மக்களுக்கு சாப்பிட முடியவில்லை. வெற்றி என்பதால் தானே தேர்தலை பிற்போடுகிறார்கள்… நிவுயோக் டைம்ஸ் குற்றச்சாட்டு தொடர்பில் நான் பதிலளித்தேன் (நிவுயோக் டைம்ஸ் குற்றச்சாட்டு தொடர்பில்..) நாம் மஹேந்திரனின் களவு குறித்து தெளிவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டோம். அவர் உறுதியளித்திருந்தார் பராளுமன்றிற்கு அழைத்து வருவதாக… அவரை கொண்டு வந்து நிறுத்தினால் நானும் பதிலளிப்பேன்…”

 

R.Rishma