மஹேலவின் ட்விட்டரிலிருந்து இலங்கை அணிக்கொரு தகவல்

பாகிஸ்தான் அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெற்றியை சுவீகரித்த மெதியூஸ் தலைமையிலான இலங்கை அணிக்கு மஹேல ஜெயவர்தன வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் வலைத்தளத்தில் கருத்துத் தெரிவிக்கையில்,

“குசல் ஜனித் மற்றும் தினேஷ் சந்திமல் இனது ஆரம்பம் பாராட்டக்குறியதொன்றாகும். 288 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பாடிய அவர்களது ஒத்துழைப்பினை மெச்சுகிறேன்” என தெரிவித்திருந்தார்.

மேலும், இலங்கை – பாகிஸ்தான் 3வது ஒருநாள் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெரவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(riz)