மாகந்துரே மதுஷ் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார்…

(FASTNEWS|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள குழுத்தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதுஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்‌ஷித இன்று(5) அதிகாலை நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் UL 226 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மாகந்துரே மதுஷை குற்றப்புலனாய்வு திணைக்களம் பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

டுபாயில் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களுள் 30 பேர் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மதுஷ் நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.