அண்மையில் துபாயில் கைதான பாதாள உலகக் குழு தலைவராக கருதப்படும் மாகந்துரே மதூஷ் தொடர்பில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார கேகாலையில் நேற்று(06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, மதூஷினை இலங்கைக்கு கொண்டு வந்து பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீழ் தடுத்து வைத்து முறையாக விசாரணைக்கு உட்படுத்தினால் அதிகமான தகவல்கள் கிடைக்கலாம் என்றும், அது நாட்டுக்கு மிகவும் முக்கியமாக அமையும் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“..மாகந்துரே மதூஷிற்கும் தமக்கும் எதிர்காலத்தில் ஒன்றாக சிறையில் இருக்கவேண்டிய நிலைமை ஏற்படுமோ என்பது குறித்து தமக்கு தெரியாது என நாமல் குமார கூறியுள்ளார்.
எவ்வாறிருப்பினும், மாகந்துரே மதூஷ் போன்ற குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்காக அலுகோசு பதவிக்கு பணியாளர் அவசியமாயின் சம்பளமின்றி சேவையாற்ற தாம் தயார்..” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(iFA)