துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழுவை சேர்ந்த மாகந்துரே மதூஷ், அல்ரபா பொலிஸ் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், மதூஷ் தொடர்பில் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய கருத்துத் தெரிவித்திருந்தார்.
“31 பேர் இன்று(07) [அதாவது நேற்று 07] துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தமக்கு தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் அறியக் கிடைத்தது.
அஜித் அரங்க விக்ரமசூரிய என்ற பெயரிலேயே மாகந்துரே மதுஷ் துபாய்க்கு இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்..”
பாதாள உலக குழுவின் தலைவரான மாகந்துரே மதூஷ் உள்ளிட்டவர்கள் கடந்த 05ம் திகதி துபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது