மாகந்துர மதூஷ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தீர்ப்பு ஒத்திவைப்பு…

(FASTNEWS|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என கோரி டுபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று(18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.