மாகாண ஒருநாள் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி உலகக் கிண்ணம் செல்லும் வீரர்கள் இவர்கள் தான்..

(FASTGOSSIP COLOMBO) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் உலகக் கிண்ணப் போட்டிகளை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான சுப்பர் ஒருநாள் தொடர் கடந்த வியாழன்று(11) நிறைவுக்கு வந்தது.

சுமார் 08 நாட்களாக நடைபெற்ற இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் லசித் மாலிங்க தலைமையிலான காலி அணியும், தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணியும் பலப்பரீட்சை நடத்தியிருந்த நிலையில், சீரற்ற காலநிலையால் போட்டி தடைப்பட இறுதியில் இரண்டு அணிகளுக்கும் இணை சம்பியன் பட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், உலகக் கிண்ணத்தில் விளையாடலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் இப்போட்டித் தொடரில் பிரகாசிக்கவில்லை.

அந்தவகையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கிண்ண இலங்கை குழாம் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அக்குழாமில் இடம்பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான இறுதி வாய்ப்பாக அமைந்த இம்முறை மாகாண அணிகளுக்கிடையிலான ஒருநாள் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களாக, அஞ்செலோ மெதிவ்ஸ் (தம்புள்ளை அணி), லஹிரு திரிமான்ன (காலி அணி), பானுக்க ராஜபக்ஷ (தம்புள்ளை அணி), திமுத் கருணாரத்ன (கண்டி அணி), லசித் மாலிங்க (காலி அணி), திசர பெரேரா (கண்டி அணி), கசுன் ராஜித்த (கண்டி அணி), ஜீவன் மெண்டிஸ் (தம்புள்ளை அணி) மற்றும் அகில தனஞ்சய (கொழும்பு அணி) ஆகிய வீரர்கள் கருதப்படுகின்றனர்.