மாகாண சபைத் தேர்தலை காலந்தாழ்த்துவதே அரசின் நோக்கம் – கூட்டு எதிர்க்கட்சி சாடல்..

எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையை ஏற்கொள்ளாமல் நிராகரிப்பதன் ஊடாக மாகாண சபைத் தேர்தலை மேலும் காலந்தாழ்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை காலந்தாழ்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களை திரட்டி போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.