பாராளுமன்ற வளாகத்தில் நேற்று(22) நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராயப்பட்ட நிலையில் குறித்த கூட்டத்தில் எவ்வித மாகாண சபை தேர்தல் தொடர்பிலும் எந்த முடிவும் எட்டாமல் முடிவுக்கு வந்துள்ளது.
குறித்த கூட்டத்தில் எந்த தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பதில் கட்சித் தலைவர்களுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.
இதனால், எதிர்வரும் ஜூலை 6ஆம் நாள் நாடாளுமன்ற விவாதத்தை நடத்தி, புதிய தேர்தல் முறையின் கீழா அல்லது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழா தேர்தலை நடத்துவது என முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
மாகாணசபைத் தேர்தல்கள் புதிய தேர்தல் முறையின் கீழேயே நடத்தப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து என்று இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.