மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் பாராளுமன்றில் நாளை(24) இடம்பெறவுள்ள விவாதத்தின் போது அதற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆகியவை தீர்மானித்துள்ளது.
இன்று(23) இடம்பெற்ற பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது குறித்த இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் , இந்த அறிக்கைக்கு தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக இன்றைய(23) ஊடக சந்திப்பின் போது மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் , பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.