மாகாண சபை கலைப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் இவ்வார அமைச்சரவையில் முன்வைப்பு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாகாண சபை கலைப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று நாளை(22) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில், தாக்கல் செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

09 மாகாண சபைகளில் ஏற்கனவே 06 மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் காலாவதியாகிவிட்ட இந்நிலையில், ஏனைய 03 மாகாண சபைகளையும் கலைக்கும் வகையில் ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்டுள்ள குறித்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரேயடியாக நடத்தும் வகையில் ஜனாதிபதி இத்திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக மேலும் கூறப்படுகிறது.