தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கோரிக்கை விடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று(26) நடத்திய பேச்சுவார்த்தையின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படுவதை உறுதி செய்யும் கடப்பாடு தமக்கு உண்டு என்றும், அவ்வாறு நடத்தப்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் வழங்கியுள்ளதென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.