வடமத்திய, சப்ரகமுவா மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான காலம் அக்டோபர் 2ம் திகதி முடிவடைய இருகின்றது. இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அம்மாகாண சபைகளுக்கான நியமனங்கள அக்டோபர் 2ம் திகதி கோரப்படும் என அண்மையில் அறிவித்திருதார்.
ஆனால் நேற்று பிரதம மந்திரி ரணில் விக்கரமசிங்க அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கும் மற்றும் பழைய விகிதாசார புதிய கலப்பு தொகுதி மற்றும் விகிதாசார முறைகளை உள்ளடக்கிய தேர்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதி பெறும்வரை, மாகாண சபைகள் தேர்தலை பின்போடும் அனுமதியை கோரியிருந்தார். அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
எனவே அரசாங்கம் மாகாண சபைதேர்தல்களை பின் போடுவதாக அறிவித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி அணியினர் அரசாங்கம் இத்தகையதொரு முடிவினை எடுக்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மத்திய அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட சுமார் 80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசியர்கள் பற்றாக்குறை, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை…
ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு பேர் கட்டுகஸ்தொட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள்…