பேரூந்து போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, மாகாண பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் 10 ஆம் திகதி, டீசல் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகையில், லீற்றரின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்படும் பட்சத்தில் ஆகக் குறைந்த பேரூந்து கட்டணம் உள்ளடங்களாக பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma