காலமான அஸ்கிரிய பீட மாகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்சி தேரரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய உடுலே தம்மாலோக தேரருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீசாந்த பீரிஸ் அனுமதியளித்துள்ளார்.
மேலும், வணக்கத்துக்குரிய உடுவே தம்மாலோக தேரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி தாக்கல் செய்த மோஷன் மனுவை கருத்தில் கொண்டு அனுமதியளிக்கப்பட்டதுடன்,தேரரின் பிணை மனு தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என நீதவான் இதன் போது தெரிவித்துள்ளார்.