சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச் சென்றவர்களை பொலிஸார், துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்கிப் பிடித்துள்ளனர்.
குறித்த சம்பவம், அல்பிட்டிய தெலிகட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.வான் ஒன்றில் மாடுகளை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் குறித்த வாகனத்தை துரத்திச் சென்றுள்ளனர்.
எனினும், வாகனத்தை நிறுத்தாத காரணத்தால் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தி நால்வரை மடக்கிப்பிடித்ததோடு,இரண்டு மாடுகளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர குறிப்பிட்டார்.
இதேவேளை, இருவர் தப்பிச்சென்றுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சமூக ஊடக வலையமைப்புகளை கட்டுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். சமூக…
சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மொங்கோலியா கனிம வளத்தைக் கொண்ட நாடு. இங்கு நிலவி வரும் அமைதியான சூழலால் வெளிநாடுகள் பலவும் மொங்கோலியாவில் முதலீடு செய்வதில்…