மாடு வளர்ப்பு கொட்டகைக்குள் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்ந்துகொண்டிருந்த 6 பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிட்வெல் செல்வகந்த தோட்டத்தில் இன்று காலை 9 மணியளவிலே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாடு வளர்ப்பு கொட்டகைக்குள் மாடு வளர்ப்பு பணியில் ஈடுபடுவதுபோல் இரகசியமாக மாணிக்ககல் அகழ்வு வேலை ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் பொகவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்த ஆறு பேரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இல்ல மண்ணை மாணிக்ககல் திணைக்களத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட 6 பேரையும் அட்டன் மாவட்ட நீதீமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்.