மாணவர்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்ய வருகிறது finger_print!!

பாடசாலை மாணவர்கள் ஆள் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் புதிய நடைமுறை ஒன்று கல்வி அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவினால் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலைகளுக்குள் உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் இலக்கமொன்றை (Unique Student Code) அறிமுகப்படுத்தவும், கைவிரல் அடையாளத்தின் மூலம் ஆள் அடையாளத்தை உறுதி செய்து அதனுடாக கியூ.ஆர் (QR) குறியீடு ஒன்றை தயாரிப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய பரீட்சைகளான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை, கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றின் போது, மாணவர்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என, அரசாங்கத் தகவல் திணைக்களத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

 

#####