பகிடிவதை தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவர்களது மஹபொல புலமைப் பரிசிலினை நிறுத்துவது தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை வரவேற்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது.
குறித்த கூட்டமைப்பின் தலைவரும் பேராசிரியருமான கே.கே.ஐ.யு. அருண குமார் இது குறித்து தெரிவிக்கையில்; பகிடிவதை தொடர்பில் மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது கட்டாயம் எனத் தெரிவித்தார்.