மாணவர்களுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பிரித்தானியாவுக்கான மாணவர் விசா விண்ணப்பங்களை துரிதமாக சமர்ப்பிக்குமாறு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் தமது விசாவுக்கான விண்ணப்பங்களை துரிதமாக சமர்ப்பிக்குமாறு பரிந்துரைப்பதாகவும், காரணம் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு முடிவுகள் வெளியாக 5 வாரங்கள் ஆகும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

எனவே உடனடியாக விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஆரம்பிக்குமாறும் உயர்ஸ்தானிகராலயம் இலங்கை மாணவர்களிடம் கோரியுள்ளது.