மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது…

யாழ். பிரபல பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர்(48) இன்று(19) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரம் நான்கில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று(19) யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

R.Rishma