பூகொட பகுதியில், பாடசாலைக்கு செல்வதற்காக ஹங்வெல்லவில் இருந்து கிரிதிவெல வரை பயணித்த தனியார் பேரூந்தில் பாடசாலை மாணவி ஒருவரை ஆபாசமாக முறையில் வீடியோ எடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பேரூந்தானது, பாடசாலையை நெருங்கிய போது பின் கதவருகிற்கு மாணவி சென்ற சந்தர்ப்பத்தில் கதவிற்கு அருகில் அமர்ந்திருந்த நபர் மாணவியின் ஆடைக்கு கீழ் கையடக்க தொலைபேசியை வைத்து காணொளி எடுத்துள்ளார்.
இதனை அவதானித்த நபர் ஒருவர் மாணவியின் தந்தையிடம் தெரிவிக்கவே, பேரூந்தில் பயணித்த அனைவரும் ஒன்றிணைந்து குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர்.
அவரது கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போது பஸ்ஸில் பயணித்த பலரை தவறாக எடுத்த காணொளிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் என்பதுவும் குறிப்பிடதக்கது.