மாணவி கடத்தி கற்பழிப்பு..! தனியார் பஸ் டிரைவருக்கு வலை வீச்சு.

போளூர் அருகே உள்ள காளசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மீனா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மலையனூர் அருகே உள்ள ஒரு  கிராமத்தில் வசிக்கும் தனது பாட்டி வீட்டில் தங்கியிங்கிருந்து 10கி.மீ தூரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவி மீனா பள்ளிக்கு தினமும் தனியார் மினி பஸ்சில் சென்று வீடு திரும்புவது வழக்கம். மினி பஸ் டிரைவராக மலையனூர் அருகே உள்ள செக்குடி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (21) என்பவர் வேலை செய்து வந்தார்.

மினி பஸ்சில் தினமும் செல்வதால் ராமச்சந்திரனிடம் மீனா பேசி பழகி வந்தார். ஆனால் மீனாவை அடைய டிரைவர் ராமசந்திரன் திட்டம் தீட்டினார்.

அதற்காக மாணவி மீனாவிடம் தனது வீட்டிற்கு அழைத்து சென்று பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைப்பதாக ராமச்சந்திரன் ஆசைவார்த்தை கூறினார்.

தனக்கு நேரப்போகும் வன்கொடுமையை அறியாமல் ராமச்சந்திரனுடன் மீனா சென்றார்.

ஆனால் வீட்டிற்கு செல்லாமல் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்ற பின்னரே மாணவிக்கு ராமச்சந்திரன் மீது சந்தேகம் எழுந்தது. இங்கு எதற்கு என்னை அழைத்து வந்தாய்? என மாணவி கேட்டதற்கு ராமச்சந்திரன் தன்னுடைய சுயரூபத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தப்பிக்க முயன்றார். இருந்தும் பயனில்லை. மாணவியை வலுக்கட்டாயமாக கற்பழித்த ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து மாணவியின் பாட்டி சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்த தனியார் மினி பஸ் டிரைவர் ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.