முதலாம் ஏழாம் இலக்க சந்தேகநபர்கள் தவிர்ந்த சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் சற்று முன்னர் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன், 8 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன், 9 ஆம் எதிரி சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
………………………………. Update 27th September 13:05
புங்குடுதீவு மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை நீதிபதி சசி மஹேந்திரன் தனது தீர்ப்பை நிறைவு செய்தார்.
நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் தீர்ப்பாயத்தின் தலைவரின் தீர்ப்பே தனது தீர்ப்பு என்று அறிவித்தார்.
தற்போது யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் புங்குடுதீவு மாணவி வழக்கின் தண்டனைத் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
தீர்ப்பை எதிர்பார்த்து திறந்த நீதிமன்றில் பெரும் எண்ணிக்கையா மக்கள் திரண்டுள்ளனர்.
(rizmira)