பூங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 சந்தேக நபர்களில் 10ஆவது சந்தேக நபரை யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் மறுத்துள்ளார்.
பூங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு, இன்று திங்கட்கிழமை (08), பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.