மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) பொகவந்தலாவ, கொட்டியாகலை என்.சி. தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யபட்ட 7 பேரும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.