மாணிக்ககல் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு…

இரத்தினபுரி – மாரப்பன பகுதியில் இன்று(14) அதிகாலை மாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

காரில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் வர்த்தகருக்கு காயமேற்படவில்லை எனவும் அருகிலுள்ள வீடு மற்றும் வர்த்தக நிலையத்தின் மீதே துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.