மாணிக்க கற்களுடன் சீன நாட்டு பெண் கைது…

சட்டவிரோதமான முறையில் மாணிக்க கற்களை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் நேற்றிரவு(03) தாய்லாந்தின் பெங்கொக் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 407 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட மாணிக்க கற்கள் 48,64,777 ரூபா பெறுமதியுடையவை என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு மாணிக்க கற்களை அரசுடமை ஆக்கியதுடன் சந்தேக நபருக்கு 40,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.