மாதந்தோறும் 20 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி…

சந்தையில் உள்ள அரிசியின் அளவு பற்றாக்குறையாக இருப்பதால் கூடுதலாக அரிசியை இறக்குமதி செய்வதென இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனால் கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின், மூலம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.

மாதம் தோறும் 20 ஆயிரம் மெற்றிக் தொன் என்ற ரீதியில் கட்டம் கட்டமாக அரிசியை இறக்குமதி செய்து சதொச கிளைகள் ஊடாகவும் பகிரங்க சந்தையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.