(FASTNEWS|COLOMBO)- கொழும்பு – கிரேன்பாஸ், மாதம்பிட்டி மயானத்திற்கு அருகில் நேற்று(15) மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 வாள்களுடன் 3 சந்தேகநபர்கள் மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் உயிரிழந்த நபர்களில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ´ஆனமாலு ரங்க´ என்ற நபரும் அடங்குவதாக இனங்காணப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மயானத்தில் விட்டுச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி ´குடு ரொஷானின்´ மனைவிக்கு சொந்தமானது என உறுதியாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டி பதிவு செய்யப்பட்டிருந்த முகவரிக்கு அமைய, விசாரணைக்காக குறித்த வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.