இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழிற்சந்தை எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 2.00 மணிவரை மாத்தறை புனித தோமஸ் குமர வித்தியாலய சூழலில் நடைபெறவுள்ளது.
அதிக தொழில் வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் சரியான வழிகாட்டல் இன்றி இளைஞர் யுவதிகள் சரியான தொழிலை தேடிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளமையினால் அவர்களுக்கு சந்தர்ப்பத்தை பெற்றுகொடுக்கும் வகையில் இந்த தொழிற்சந்தை நடத்தப்படுகிறது.
இத்தொழிற்சந்தையில் சுமார் 100 அரசாங்க மற்றும் தனியார் தொழில் தருநர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
கைத்தொழில் அமைச்சின் ஆளணி மற்றும் தொழில்வாய்ப்பு திணைக்களம்- மாத்தறை மாவட்டச் செயலகம் என்பன இணைந்து இத்தொழிற்சந்தையை ஏற்பாடு செய்துள்ளன.