மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்தினை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதியாகியிருந்த பாதாள உலக குழு தலைவர் கொஸ்கட தாரக உட்பட 3 பேரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
+++++++++++++++++++++++++++++++ UPDATE
மாத்தறை துப்பாக்கிச் சூட்டின் பிரதான சந்தேக நபர் கைது..
மாத்தறை நகரத்தில் இன்று(22) காலை பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் தப்பிச்சென்ற கொள்ளையர் ஒருவர் மாத்தறை ஹுனுகொட்டுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சாமர இந்திரஜித் என்பவர் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக அறியப்படுகிறார்.
+++++++++++++++++++++++++++++++ UPDATE
மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம் – 03 பொலிசார் காயம்…
மாத்தறை நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 3 பொலிசார் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடிப்பதற்கு வந்த நபர்கள் மற்றும் பொலிசாருக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் கொள்ளையர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர அழைப்பிற்கு கிடைத்த தகவலுக்கமைய , குறித்த பிரதேசத்திற்கு பொலிசார் விரைந்துள்ள நிலையில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.