மாத்தறையில் மஹிந்த மேடை ஏறுவார்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தி எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்தறையில் பொதுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் 4 அமைச்சர்களும் 75 பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

மேலும்,ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்;

இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்வார். அவர் மாத்தறையில் பிறந்தவர். அன்றைய தினம் அது பற்றி பார்த்து கொள்ள முடியும் எனக் கூறினார்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த 58 லட்சம் பேருக்கு மேலதிகமாக மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏமாந்து வாக்களித்த மக்களும் மாத்தறை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.