மாத்தறை சம்பவம் – வாகனத்துடன் ஒருவர் கைது…

மாத்தறை நகைக்கடை கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனமொன்று இன்று (02) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலகல, பாவனா வீதி, மொரகஹஹேன பகுதியில் வைத்தே வாகனத்துடன் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறை நகைக்கடை கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகப்படும் CAE 4706 எனும் வௌ்ளை நிறமுடைய அல்டோ ரக மோட்டர் வாகனம் தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது குறித்த வாகனம் ஒரு பெண் ஒருவருடையது என தெரியவந்துள்ளது.