மாத்தறை மாணவன் கொலை சம்பவம் – மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு…

மாத்தறை – எலவேல்ல பகுதியில் மேலதிக வகுப்பிற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மாணவரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் எதிர்வரும் 10ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் இன்று மாத்தறை மேலதிக நீதவான் நில்மினி குசும் விதாரணவிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.