உள்ளுராட்சிமன்ற தேர்தலின் நிமித்தம் கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை ஆகிய திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று(12) கையெழுத்திடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அவை சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது
இந்நிலையில், சபாநாயகர் இதில் கையெழுத்திட்டவுடன் குறித்த சட்ட மூலம் வர்த்தமானியில் வௌியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.