வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரை இன்னும் ஒரு வாரத்தில் சிறைக்கு மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மருத்துவமனையில் ஞானசார தேரருக்கு அரைக் காற்சாட்டை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதை அணிய அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மாநாயக்க தேரர்கள் இணங்கினால் மட்டுமே தான் அரைக் காற்சட்டையை அணிவேன் என ஞானசார தேரர், சிறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார் என்று தெரிய வருகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் காவியைக் கழற்றப் போவதில்லை எனவும் அவர் கூறி யுள்ளாராம்.
வெலிக்கடைச் சிறைச்சாலை நிர்வாகம் இது தொ டர்பாக சிறைச்சாலைகள் தலைமையகத்துக்கு அறிவித்துள்ளது. ஞானசார தேரர் அரைக் காற்சட்டை அணிய மறுப்பது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சிறைச்சாலை தலைமையகம் நீதியமைச்சிடம் வினவியுள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.