மாரப்பன்னவை தொடர்ந்து விஜயதாசவும் பதவி விலக வேண்டும் – அனுர

திலக் மாரப்பன மட்டுமன்றி நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் தொடர்பில் தாம் கூறியது உண்மை என அடித்துக் கூறும் மாரப்பன ஏன் அமைச்சுப் பதவியை துறந்தார்?

திலக் மாரப்பன பதவியை துறந்து விட்டதனால் அவன்ட் கார்ட் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட்டதாக அர்த்தமில்லை.

நாடாளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் அவன்ட் கார்ட் நிறுவனத்தை பாதுகாக்க திலக் மாரப்பன மட்டும் குரல் கொடுக்கவில்லை.

நீதி அமைச்சரும், பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சரும் அவன்ட் கார்ட் தொடர்பில் எவ்வித சட்ட சிக்கல்களும் கிடையாது என அறிவித்திருந்தனர்.

எனவே திலக் மாரப்பனவிற்கு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மீதும் சுமத்தப்படுகின்றது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.