‘மாரி 2’ படத்தில் அனிருத்தை கழட்டி விட்ட தனுஷ்?

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் ‘மாரி 2’ படத்தில் இசையமைப்பாளராக அனிருத் பதிலாக வேறொரு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்த ‘மாரி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதுடன் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் பாலாஜி மோகன்.

‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளார். வில்லனாக டோவினோ தாமஸ் நடிக்க இருக்கிறார்.

‘மாரி’ முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. ஆனால், ‘மாரி 2’படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்த படங்களில் ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களுக்கு யுவன் இசையமைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.