மாற்றங்கள் எதுவுமின்றி இலங்கை அணி தயார் நிலையில் – ஹத்துருசிங்க..

இன்று(06) இடம்பெறவுள்ள சுதந்திரக் கிண்ணத் தொடரில் சிறப்பாக செயற்படுவதற்கு இலங்கை அணி தயார் நிலையில் இருப்பதாக அதன் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

“..இலங்கை அணிக்கு கடந்த மாதங்களில் சிறந்த கிரிக்கெட் தொடர்கள் கிடைக்கப் பெற்றதோடு, பயிற்சி நடவடிக்கைகளும் சிறப்பாக அமைந்திருந்தன.

அத்துடன் அணியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாற்றங்கள் எவையும் செய்யப்படவும் இல்லை. எனவே குறித்த தொடருக்கு இலங்கை அணி சிறப்பாக விளையாடுவதற்கு தயாரான நிலையில் இருக்கிறது…” என ஹத்துருசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

#rishma