மாலபே குறித்து ராஜித மௌனிப்பதற்கான காரணத்தை போட்டுடைத்தார் லஹிரு

மாலபேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதற்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏன் முன்னிற்கிறார் என்பதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் காரணம் கூறியுள்ளது

ராஜித சேனாரத்னவின் மருமகள் குறித்த பல்கலைக்கழகத்திலேயே சட்டப்படிப்பை மேற்கொண்டமையே இதற்கான காரணம் என்று மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளார் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

ராஜித சேனாரத்னவின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரட்னவின் மனைவியான சரூபா சமங்கி மானதுங்கவே அங்கு சட்டக்கல்வியை மேற்கொண்டார் என்று லஹிரு தகவல் வெளியிட்டுள்ளார்.

அவரின் பதிவு இலக்கம் எம்எப்121எப் என்பதையும் லஹிரு மேலும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை பல அரசியல்வாதிகளின் உறவினர்களும் எஸ்ஏஐடிஎம்(SITM) இந்த பல்கலைக்கழகத்தில் கற்பதன் காரணமாகவே அரசாங்கம் அந்த பல்கலைக்கழகத்தை பாதுகாத்து வருகிறது.

இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டயங்கள் பல மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை மருத்துவ சபை (எஸ்ஏஐடிஎம்) தனியார் பல்கலைக்கழகத்துக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

எனினும் இங்கு கற்கும் மருத்துவ மாணவர்கள் கடுவெல மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் உள்ளக பயிற்சிகளை மேற்கொள்ளமுடியும் என்று அண்மையில் சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்ன அறிவித்திருந்தார்.

இதனையடுத்தே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமது தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதேவேளை அமைச்சரின் தீர்மானத்துக்கு எதிராக ஒன்றுதிரட்டிய பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஒன்றியத்தின் அழைப்பாளர் தெரிவித்துள்ளார்.