மாலபே – கோட்டை இலகு ரயில் சேவைத் திட்டத்தினை நிர்மாணிக்க கைச்சாத்து…

(FASTNEWS |COLOMBO)- கொழும்பு இலகு ரயில் திட்டத்திற்காக ஜப்பான், 48 பில்லியன் ரூபாவை நிவாரணக் கடனாக வழங்குவது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கமும் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவனமும் கைச்சாத்திட்டுள்ளன.

மாலபே நகரையும் கொழும்பு கோட்டையையும் இணைக்கும் வகையில் குறித்த இலகு ரயில் வலைப்பின்னல் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

கொழும்பு நகரில் நிலவும் சன நெரிசலைக் குறைத்து பயணிகள் இலகுவாக முக்கிய இடங்களுக்கு பயணிக்க வழிவகுப்பது குறித்த திட்டத்தின் நோக்கமாகும்.