மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அரசு தற்போது அறிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அதில் நாட்டின் கல்வியின் தரம் மற்றும் இலவச கல்வியை உறுதிப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள கொள்கை தீர்மானங்கள் குறித்த அந்த அறிக்கையின் ஊடாக மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- மருத்துவ பட்டப்படிப்பிற்கான இறுதி பரீட்சைக்கு தோற்றிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஹோமாகம மற்றும் அவிசாவளை அரச மருத்துவமனைகளில் பயிற்சிகளை வழங்க அரசாங்கம் தீர்மானம்.
- இலங்கை மருத்துவ சபை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் பரீட்சைக்கு சைட்டம் மாணவர்கள் தோற்ற வேண்டியது கட்டாயம்.
- மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வரையில் புதிதாக மாணவர்களை இணைத்துக்கொள்வதை, மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி கைவிட வேண்டும்.
- நவீன வசதிகளைக் கொண்ட நெவில் பெர்ணான்டோ மருத்துவமனையை அரசாங்கம் பொறுப்பேற்று போதனா மருத்துவமனையாக பொதுமக்களுக்கு இலவசமாக சுகாதார சேவையை வழங்கவும் அரசாங்கம் தீர்மானம்.
மேற்குறித்த தீர்மானங்கள் குறித்த அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளது.