மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தெஹியோவிட்ட, திம்பிரிபல ஸ்ரீ அபிநவாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தங்க வேலியை திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று(23) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். சிறந்ததோர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு, பிரிவினை தடையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளிலும் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பிரிந்து நிற்காது அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் சைட்டம் குறித்த அரசின் நிலைப்பாட்டினை நேற்று(23) வெளியிடுவதாக அரசாங்கம் கடந்த தினங்களில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)