மாலபே, சைட்டம் நிறைவேற்று அதிகாரிக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு…

வெளிப்படையாக மருத்துவர் போன்று செயற்படும் மாலபே, சைட்டம் நிறைவேற்று அதிகாரி தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மருத்துவ அதிகாரிகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தெற்காசியாவின் தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனத்தின் (SAITM) தலைமை நிறைவேற்று அதிகாரியாக செயற்படும் அதன் மருத்துவ பீடத்தின் பணிப்பாளர் சமீர ரேணுக சேனாரத்னவுக்கு எதிராக அந்த சங்கம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று இன்று(22) பதிவு செய்யப்படவுள்ளது.

அகில இலங்கை மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் பொது செயலாளர் ஜயந்த பண்டார இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.