சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை நிறுவ நாட்டிலுள்ள அனைத்து வைத்திய பீடாதிபதிகளும் இணக்கம் தெரிவித்ததாக, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் பொருட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியும் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரிகில்லகஸ்கட – பொரமடுல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே, திஸாநாயக்க மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
அத்துடன், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக செயற்பட வைத்திய சபைக்கு முடியாது எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.